இந்நாள் இன்புற எங்குமே நன்மையே - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(நெடிலீற்று மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு; (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
(1, 3 சீர்களில் மோனை)
வந்தேன் சொல்லுவோம் வந்தனம் நாளுமே;
இந்நாள் இன்புற எங்குமே நன்மையே!
நொந்தேன் என்றே நுவலவும் வேண்டிலேன்;
செந்தேன் போலவே செம்மையாய் வாழுவோம்!
– வ.க.கன்னியப்பன்
பாடலுக்கு முன் தந்துள்ள குறிப்புகளை வாசித்துவிட்டு இது போல ஒரு கலிவிருத்தம் எழுதுங்களேன்!