வாதம் நீக்கும் பொருட்கள் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
செங்கழு நீர்கோஷ்டந் தேன்மிளகு நல்லெண்ணெய்
தங்குபெருங் காயந் தழுதாழை - எங்கெங்கும்
கூட்டுசிறு முத்துநெய் கோதில் உளுந்திவைகள்
வாட்டுமனி லத்தை மதி
- பதார்த்த குண சிந்தாமணி
- பொருஉரை::
செங்கழுநீர்க்கிழங்கு, கோட்டம், குறிஞ்சித்தேன், மிளகு, எள்ளெண்ணெய், பெருங்காயம், தழுதாழை இலை , சிற்றாமணக்கெண்ணெய், உளுந்து ஆகியவை வாதநோயினைப் போக்கும்.