மீண்டும் வருமா அந்த காலம்?
பாடசாலை வாழ்க்கை என்பது சுவையானது
நினைத்தாலும் இனி பெற முடியாதது
அதன் நினைவுகளோ என்றும் அழியாதது
புதிய மாணவர்களை அதிபரின் முன்னால்
வரவேற்று பின் வகுப்பறையில்
அடிமைபடுத்தியது
காற்றாடியில் காற்று வரவில்லை என
புதிய காற்றாடி வாங்க அதை உடைத்தது
பெண்கள் பாடசாலை என்பதால் இறுக பூட்டிய
ஜன்னல்கள் அதை உடைத்தது
வெறுக்கும் பாட வேளையில் வகுப்பறையை
பூட்டி விட்டு கன்டீன்னுக்கு சென்றது
பரீட்சையின் போது பார்த்து எழுதியது
ஆசிரியர்களுக்கு பெயர் வைத்தது
வகுப்பறையிலேயே குழுச்சண்டை
இடைவேளை உணவு வேளையில் ஜாதி , மதம்
பாராமல் உணவு பகிர்ந்தது
சைவ நண்பர்களுக்கு அசைவ உணவை உன்ன
வைத்தது
கவலை, கண்ணீர்,
அனைத்தையும்
மறைக்காமல் பகிர்ந்து கொண்டது.....
பாடசாலை வாழ்க்கை முடியும் வேளையில்
நமது இருக்கைகளில் எமது பெயர்களை
பதிந்து......
என்னும்...பல.....
மீண்டும் வருமா.....அந்த காலம்........?