கைப்பேசி

தேடி வரும் தூக்கமும்
ஓடி போகும் உன்னை கண்டு.
நீ என்ன பயங்கரவாதியா?
நண்பன் போல வேடமிடும்
நாடகவாதி.
தெளிந்த மனமும்
குழம்பி போகும்.
ஏதோ ஒன்றை காண தொட்டு
எதற்காக எடுத்தோம் என்று மறந்து
சிந்தையை திசை மாற்றும்.
பாதை மாற்றும் பலகையே.
உன்னுள் புதைத்து வைத்திருக்கும்
குப்பைகளை எறியாதே.
அறியாதவன் குப்பையை
குதூகலம் ஆக்கி
குறுகி போகிறான்.
உலகை கையில் கொடுத்து
உடலினை அடக்கி
அடிமை செய்கிறாய்.

எழுதியவர் : நிலவன் (25-Nov-22, 9:59 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : kaippesi
பார்வை : 74

மேலே