இன்று பல வருடங்கள்
இன்று பல வருடங்கள்.
மாமல்லபுரம்
சென்றிருந்தேன்,
தமிழர் பெருமை
சுற்றி சுற்றி பார்த்து
மகிழ்ந்தேன்,
தாகத்துடன் திரும்பி
நடந்து வரும்போது.....
மரநிழலில் பாட்டி
ஒருத்தி,
பானை ஒன்றுடன்...
தமிழர் நிறம்
சொல்லி நின்றாள்
அவள் விற்ற மோரில்,
இரண்டு கோழை
வாங்கி குடித்தேன்.
அவள் கழுத்தில்,
காதில் நகை நட்டு
ஒன்றுமில்லை!
ஆனால் அவள் முகத்தில்
அன்னை பராசக்தி
புன்னகையுடன்
அமர்ந்திருக்க கண்டு
மகிழ்ந்தேன்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.