வலிகளோடு வாழ்க்கை பயணம்

நெடுங் கவிதை
நேரம் ஒதுக்கி படியுங்கள்
எனது வலிகளை வரிகளாய் விவரித்துள்ளேன்

வலி எப்போதும் கண்ணீரில்
மட்டும் இருப்பதில்லை..
சில நேரங்களில் சிரிப்பிலும்
மறைந்து இருக்கும்..!

எவரையும் ஏமாற்றாமல்
துரோகத்தின் வலி கொடுக்காமல்
மிக தெளிவாக உண்மையை
மட்டுமே பேசுபவனின் பெயர்
“பைத்தியக்காரன்”..!

அனைவரையும் சிரிக்க வைத்து
ரசித்தவன் நான்.. என்னையும்
அழவைத்து ரசித்தது
வாழ்க்கை..!

நல்லவனாய் இரு.. ஆனால்
அதை வெளிக்காட்டிக் கொள்ளாதே..
நல்லவனை உலகம் மதிப்பதில்லை..!

வலியும் வேதனையும் சொன்னால்
புரியாது.. அனுபவிப்பவனுக்கு
தான் தெரியும்..!

அடுத்தவர்களை சிரிக்க வைப்பவன்
வாழ்வில் அழுது பழக்கப்பட்டவன்..!


உனக்கு மற்றவர்களை ஏமாற்ற
தெரியவில்லை என்றால்.. உனக்கு
பிழைக்க தெரியவில்லை..
என்று அர்த்தம்..!

நீ நீயாக இல்லாதவரை
பல வலிகள் உன்னை
துரத்திக்கொண்டு தான்
இருக்கும்..!

என்னை பற்றியும் என்
குணத்தைப் பற்றியும் விமர்சிப்பது
மிகவும் எளிதானது தான்..
நான் பயணித்த அதே பாதையில்
நீங்கள் பயணம் செய்யாத
வரையில்..!

என் பாதையில் ஆயிரம்
தடுமாற்றம் வரலாம்.. ஆனால்
என் பயணம் என்றும்
தடம்மாறது..!

வானம் என்றால் ஆயிரம்
நட்சத்திரங்கள் வரும்..
வாழ்க்கை என்றால் ஆயிரம்
துன்பங்கள் வரும்.. சூரியன்
வந்தால் நட்சத்திரங்கள்
மறைவது போல..
தன்னம்பிக்கை இருந்தால்
துன்பங்கள் அனைத்தும்
மறைந்து போகும்..!


ஒருவரின் வலியின் வேதனை
புரிந்தவன்.. மற்றவனை
ஒரு போதும்
காயப்படுத்தமாட்டான்..!

வாழ்க்கையில் நான் பட்ட வலி
இனி யாருக்கும் வேண்டாம்..
கடவுளே..!

சில இழப்புக்கள் வலியை
தருகின்றது.. சில இழப்புகள்
வலிமையை தருகின்றது.

வலிகள் என்றால் எப்படி இருக்கும்
என்பதை உணர்த்தி விட்டு தான்..
இன்பம் என்பது எப்படி இருக்கும்
என்பதை உணர்த்துகின்றது
இந்த வாழ்க்கை..!

மாறி விட்டோம் என்பதை
விட பல வலிகள் நம்மை
மாற்றி விட்டது என்பதே
உண்மை.

என் மனம் வலிகளை
சுமக்கின்றது.. என் புத்தி
குழப்பங்களை சுமக்கின்றது..
இதற்கு இடையில் தான்
நடக்கிறது என் வாழ்க்கை..!

கவலையை மறக்க அழுதேன்
அழுகையை மறைக்க
மௌனமானேன் மௌனத்தை
மறைக்க தனிமையானேன்.


இழந்தவை என்பது பலருக்கு
வார்த்தை சிலருக்கு
வாழ்க்கை..!

எத்தனையோ வலிகள் என்னிடம்
உண்டு.. எண்ணிக்
கொண்டிருந்தால் மீள முடியாது..
சொல்லிக் கொண்டே இருந்தால்
வாழ முடியாது.

நகர்ந்து கொண்டே
இருக்கின்றேன்..
ஒவ்வொருவரிடம் இருந்தும்
ஒரு பாடத்தை
கற்றுக்கொண்டு என்
வாழ்க்கை பாதையில்..!

ஒரு முறை அழுது விடு..
சோகம் குறையும்.
ஒருமுறை கத்தி விடு..
கோபம் குறையும்.
ஒருமுறை சிரித்து விடு..
பாரம் குறையும்.
ஒருமுறை விலகி விடு..
நேசம் புரியும்.

என் வலி சிலருக்கு சிரிப்பை
தரலாம்.. ஆனால்
என் சிரிப்பு யாருக்கும்
வலியைத் தராது.

வலியோடு வாழப் பழகி கொண்ட
பிறகு தான் வாழ்க்கை
என்றால் என்னெவென்று
புரிய தொடங்குகின்றது..!

சில நேரங்களில் அழுவதற்கு
கண்ணீர் இல்லை.. ஆனால்
காரணங்கள் அதிகம்
இருக்கிறது.

எழுதியவர் : மன்னை சுரேஷ் (26-Nov-22, 3:24 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 44

மேலே