காதல் விரும்பி

குறள் வெண்பா

காதலைப் பாட அறுசீர் விருத்தத்தில்
சாதனை செய்வரும்பா பார்


(1)
காதல் காதல் என்று
..... அதையும் தினம்நீ கிறுக்க

பூதப் பிசாசு என்பர்
......புகழும் தமிழைப் படியும்

போதத் தமிழில் நூலும்
.... கொள்ளை யுண்டு கற்க

சோதா வெனநீ எழுத
....... சொல்லில் பஞ்சம் வருமே

(2)
சிமிழின் ஆணி முத்து
....சிறந்த தொப்புழ் உவமை

அமிழ்துக் கொவ்வும் தமிழில்
......யாப்பு நீங்க கெடும்பா

சிமிலி நிமிரல் உணறு
......சிறந்த தமிழின் யாப்பு

நேமி தேவர் ஊதும்
....உமியென் றுனையும் உண்மை

(3)
அறுசீர் விருத்தம் ஒன்றை
..... தமிழில் செய்ய என்ன

வெறும் மாசீர் வித்தை
...... செய்யத் தெரிய வில்லை

பொறுப்பு இன்றி எதையும்
..... உளற கவிதை யாமோ


கிறுக்கன் கிறுக்கும் கிறுக்கல்
...... சிறக்கு மோசொல் தமிழே.



சிமிலி == உறியில்
நிமிரல் == சோறு

எழுதியவர் : பழனி ராஜன் (26-Nov-22, 6:43 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal virumbi
பார்வை : 67

மேலே