கண்டடைவேன் என் காதலியை
கண்டடைவேன் என் காதலியை..
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
காலைப் பனியினில்
நடுங்க வைக்கும் - நீ
கார்த்திகைக்
குளிரினில்
கலந்து இருக்கிறாய் /
விடியல் அழகென
மெல்ல மலரும் -- நீ
வீசும் தென்றலாய்
வருடிச் செல்கிறாய் /
மூச்சுக் காற்றினில்
ஓடியாடும் -- நீ
முழுதும் என்னிலே
நிறைந்துத் துடிக்கிறாய் /
யாதும் அறிந்திடா
பேதை மானுடன்
தேடிச் சலிக்கிறேன்
நின்னைக் காணவே !
தேடுவேன்
எனக்குள்ளும்
கண்டடைவேன்
கண்மணியை !!
-யாதுமறியான்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
