தீபாவளிலி

சிறுகதை
ஆக்கம்
அறந்தை ரவிராஜன்
***** **********

தீபாவளி(லி)


தீபாவளின்னா இன்னும்...
அந்த மாஸ் குறையலை...ஆமாம்
என்ன கூட்டம்....போத்தீஸ்ல க்யூ
செக்யூரிட்டி வச்சு கண்ட்ரோல்
பண்ணிகிட்டு இருந்தாங்க..

ஏங்க ...எப்டிங்க...உள்ளே போயிட்டு
வரத்துக்கு அரைநாள் ஆயிடும்
போல..

ஆமாம்மா..குழந்தைகளுக்குத்தானே...அதுவும் ரெடிமேட்ஸ்...
வந்திடலாம்..காரை பார்க் பண்ணிட்டு கடைக்குள் நுழைந்தேன் மனைவி தாரணி மகள்
நட்சத்திராவுடன்

கூட்ட நெரிசல்..
வாங்க சார்..
ஜில்ரனுக்கு..
பஸ்ட் புளோர் சார்..

அப்பா.. எஸ்கலேட்டர்ல
போவம்பா ....எனது அஞ்சு வயது
நட்சத்திரா

மூன்று பேரும்..முதல் மாடி...
குழந்தைகளுக்கு... அவ்வளவு டிசைன்கள் லேட்டஸ்ட் ட்ரண்டாம்..

ம்.. நான் சின்ன பிள்ளையா இருக்குப்போதெல்லாம் இவ்வளவு
வெரைட்டி இல்லை . வாய்ப்பும்இல்லை.பணப் புழக்கமும் இல்லை.

அப்பா.. எப்பப்பா தீவாளி ட்ரஸ்
எடுக்கிறது..

பிரண்ட்ஸ் எல்லாம் இரண்டு ட்ரஸ்
எடுத்திருக்காங்கலாம்
எல்லாம் சூப்பரா இருக்குதாம்..
கிளாஸ்ல இதான் பேச்சு..

இதோ பார் கமலி..பேசாம இரு
அப்பா எடுத்து தருவாங்க..

நீ போடா...

இரும்மா.. இந்த வருஷம் முதலாளி
தீபாவளிக்கு முன்னாடி மூனு நாள்ல எல்லாருக்கும் போனஸ் தரதா
சொல்லியிருக்கார்...சின்ன பேக்ட்ரியா இருந்தாலும் எங்களாலே
நல்ல லாபம்னு ஓபனாகவே
சொல்லியிருக்கார்..நல்ல மனுஷன்.
அப்பாவின் வார்த்தையை அப்படியே
மனதில் நிறுத்தி கனவில் மிதந்தது
கமலி மட்டுமல்ல அவளது அண்ணனும்தான்....
மறுநாள் காலை..

வீட்டு வாசலி யாரோ கூப்பிடுவது போல இருந்தது
என்னங்க..உங்களைத்தான் யாரோ ..
நீலகண்டனோடு வேலைபார்ப்பவர்..
அவர் ஏதோ சொல்ல அப்படியே
திகைத்தபடி..கண் கலங்கியவாறு
வருவதைப் பார்த்து பத பதைத்தவளாய்...
என்னாச்சுங்க...

அது வந்து ...வந்து.. முதலாளிக்கு
அட்டாக். சீரீயஸா இருக்காம்.ஐ சி யூல சேர்த்திருக்காம்..
அழுகாத குறையாய்..முதலாளியை
நினைத்தான் . பாவம்..பிள்ளைங்களை பார்க்கும்போது....
தீபாவளி கனவுகள்...
புது டிரஸ் பட்டாசு எப்படி..வலித்தது.
தலை சுத்தியது..

பரவால்லைங்க... நம்மளுக்கு
சாப்பாடு போடுற முதலாளி நல்லா
பொழைச்சு வந்தாப்போதும்....

குழந்தைங்க...

தீபாவளிதானே....இந்த தோடு இரண்டையும் அடகு வச்சு பணம் வாங்கிட்டுவாங்க.. என்றவாறு
மிஞ்சியிருந்த தங்கத்தோட்டையும்
கழட்டிக் கொடுத்தாள் அந்தத்
தங்கமானவள்...

தீபாவளி முதல் நாள் இரவு...
பஜாருக்குள் போக முடியல..
பிளாட்பாரம் கடையில் நாலுபேரும்..

கமலிதான் பேசினாள்..
அப்பா..இந்த கவுன் நல்லாயிருக்கில..
வாங்கி விலையைப்பார்த்த
நீலகண்டனுக்கு கண்கள் ஆறாக..
இது போதுமாடா..மகளை ஆரத்தழுவினான்..
முதலாளி நல்லா வரட்டும்பா.

மகனுக்கும் குறைச்ச விலையில்
அதுவும் பிளாட்பார்ம் கடையில்..
மகனைப் பார்த்தான்
இதான்பா இப்ப டிரண்ட்...
உண்மையிலேயே தம் பிள்ளைகளை
நினச்சு பெருமைப்பட்டான்..

சார்... எல்லாம் எடுத்துப் போட்டாச்சு ..என்ன சார் மலைச்சு நிக்கிறீங்க....எது வேணும்..

ஒன்னுமில்லைப்பா....
இந்த பாக்ஸ்.. அப்புறம்..
பாய்ஸ்க்கு இதெல்லாம்..
சேல்ஸ்மேன் திகைத்தவாறு
எல்லா பாக்ஸ்ம்மமா ..பையங்க
பொம்பள புள்ளங்க பாக்ஸ்
எல்லாம் இருபது வருதே சார்..

ஆமாம்.. இருபதும் நான் ஏற்கன்வே
சொன்ன சைஸ்லில தானே..

ஓகே சார்...

பில் கிட்டத்தட்ட இருபதாயிரம் வந்தது. பேமெண்ட் பண்ணிட்டு
பார்சலை வாங்கிக்கொண்டு
வெளியே வரும்போது.....

செல்போன் ஒலித்தது...
ஆன் செய்தான்...
கமலி லைனில்..ஹைதராபாத்திலிருந்து..
அண்ணா...பர்சேஸ் முடிஞ்சுதான்னா

மறப்பேனா...கமலி

தொடர்ந்து நாம நல்ல வேலைக்கு
போனதிலிருந்து மறக்காம வாங்கிறோம்ல....

தாங்ஸ்.. அண்ணா...பாதி நான்
பே பண்ணிடுறேன் அஸ் யூசுவல்..

அப்புறம்..நேரா அங்கேதானே..

ஆமாம்...அம்மா அப்பாவை
அங்க வரச்சொல்லியிருக்கேன்..
அடுத்த வருஷமாக வந்து
ஜாயின் பண்ணிக்க தீபாவளிக்கு..

ஓகேன்னா...

மனதில் திருப்தியாய் காரைத்
திருப்பினானன் மாற்றுத்திறனாளி
குழந்தைகள் காப்பகத்தை நோக்கி..
தீபாவளி இனிதாய் கொண்டாட
மத்தாப்புடன்...
மனதிலும்

எழுதியவர் : ரவிராஜன் (28-Nov-22, 5:18 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 93

மேலே