மணம் முடிப்பர் யாரோ
விருத்தக் கலித்துறை
மாடுரெண்டும் பூட்டியே மாமவண்டியில் வந்தார் சொகுசு
ஆடு குதிரைரெண்டு கட்டிவந்தது அத்தை மகனும்
மாடுகுதி ரையுமில்லை ஆடுமேய்த்திடு அத்தான் வரவும்
பாடுபடு யெந்தையும் ஆருக்கெனை கட்டித் தருமோ
சொகுசு மாடு பூட்டி வந்தார் மாமனும் . நல்ல குதிரை வண்டியிலே
அத்தை மகனும் வந்தார் . ஏது மில்லா ஆடுமேய்க்கும் அத்தானும் வந்தார். எல்லோரும் பெண்கேட்க வந்தார். ஆனால் என் அப்பா என்னை யாருக்குக் கட்டிக் கொடுப்பாரோ தெரியவில்லை