ஆண்மை தவறேல்

அறம் காத்தல் ஆண்மை
அநீதியை தட்டிக்கேட்பது ஆண்மை
சான்றோர்க்கு கீழ்ப்படிதல் ஆண்மை
பெண் மானம் காத்தல் ஆண்மை
நித்தம் உழைப்பது ஆண்மை
ஆண்மை தவறேல்

தாய்நாட்டின் இறையாண்மை காத்தல் ஆண்மை
நல்லாட்சி புரிவது ஆண்மை
ஊழல் ஒழிப்பது ஆண்மை
வாக்கு தவறாமை ஆண்மை
சமத்துவம் பேணுவது ஆண்மை
ஆண்மை தவறேல்

பெற்றோரை காப்பது ஆண்மை
கற்றோரை மதிப்பது ஆண்மை
பேராசை கொள்ளாதது ஆண்மை
கடமை தவறாமை ஆண்மை
மடமை தவிர்த்தல் ஆண்மை
ஆண்மை தவறேல்

தாய்மொழி வளர்த்தல் ஆண்மை
வாய்மொழி காத்தல் ஆண்மை
பேரிடரில் உதவுவது ஆண்மை
நெஞ்சில் ஈரம் கசிவது ஆண்மை
குருதிக்கொடை ஆண்மை
ஆண்மை தவறேல்

மன்னித்தருள்வது ஆண்மை
உரிமைக்குக் குரல் கொடுப்பது ஆண்மை
விடாமுயற்சி ஆண்மை
விட்டுக்கொடுத்தல் ஆண்மை
இயற்கையை நேசித்தல் ஆண்மை
ஆண்மை தவறேல்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-Dec-22, 9:49 am)
பார்வை : 137

மேலே