ஏமாற்றமும் அடைவான்

மீனின் கண்கள்
இமைக்காது, மூடாது
மருளாது- அதனால்
மீனுக்கு அதிர்ச்சியோ,
அச்சமோ ஏற்படாது
மீனும் ஏமாறாது

மீன் கண்களைப் போல
கிடைக்கப் பெற்றவர் கடவுள்
அவரின் கண்களும் மூடாது
இமைக்காது, மருளாது-அதனால்
“இமையா நாட்டத்தினர்”
என்ற பெயரும் அவருக்குண்டு

மண்ணில் வாழும்
மானின் கண்கள்
இமைக்கும், மூடும்
அஞ்சி மருளும்-அதனால்
மான் அச்சப்படும்
அதிர்ச்சிக்கு உள்ளாகும்

மானின் கண்களைப்போன்று
மனிதனின் கண்களும்
மூடும், இமைக்கும், மருளும்
மனிதனும் எளிதில்
அச்சப்படுவான்
ஏமாற்றமும் அடைவான்

எழுதியவர் : (4-Dec-22, 11:09 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 37

மேலே