பார்வைகள்

பார்வைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்

தாய் தன் குழந்தைகளை
பாசத்துடன் அணைத்து
மகிழ்ச்சி கொள்வது
"பாசபார்வை"

உன்னை கண் தேடுதே என்று
காதலர்கள் கண்களால்
கொஞ்சி மகிழ்வுது
"காதல் பார்வை"

பெண்கள் மீது
மோகம்
கொண்டு பார்ப்பது
"காம பார்வை"

கோபம் வரும் போது
கண்களில் தெரிவது
"கோப பார்வை"

நண்பர்கள் சந்தித்து
மகிழ்ச்சி கொள்வது
"நட்பு பார்வை"

அடுத்தவரின் வளர்ச்சி கண்டு
பொறாமை கொள்வது
"ஏக்க பார்வை"

ஜோதிடர்கள் பார்ப்பது
கிரகங்களின் "பார்வை"....!!

இன்னும் பார்வைகளின்
பட்டியல்கள் நிறைய உள்ளது
கண் திருஷ்டி பட்டுவிடும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Dec-22, 7:38 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : paarvaikal
பார்வை : 285

மேலே