கண்ணா நீயே கதி எனக்கு
காணுகின்ற காட்சி எல்லாம் நீயாய்
காட்சி தருகின்றாய்க் கண்ணா இன்னும்
கேட்கும் ஒலியெல்லாம் உந்தன் குழலோசையே
ஓதும் வேதமெல்லாம் கண்ணா உந்தன்
கீதோப தேசமே ஒலிக்க கேட்கின்றேன் நான்
கண்ணா இங்கு மண்ணில் பிறந்த
பயன் அடைந்திடவே மாயவா எனக்கு
ஒருமுறை என்கண்முன் நீ
காட்சி தருவாய் யாகில் நீயே
கதி அல்லவோ எனக்கு எந்தெய்வம் .