158 கண் மூடும் பூனையொக்கும் கரவு அயலானைக் கூடல் – பரத்தமை 2

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

ஒருவரு மறிகிலா ரெனவொர் ஒண்ணுதல்
கரவயற் குமரரைக் கலத்தல் பூசைதன்
இருவிழி மூடிமற்றெ வர்கள் பார்வையுந்
தெரிகிலா தெனப்பயன் றிருட லொக்குமே. 2

– பரத்தமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”ஒரு அழகிய நெற்றியையுடைய பெண் தன்னுடைய தவறுதலான ஒழுக்கத்தை ஒருவரும் தெரிந்து கொள்ள மாட்டார் என்று கருதி, திருட்டுத்தனமாக அயல் ஆடவனைச் சேர்வது, பூனை தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு, மற்ற யாருக்கும் பார்வை தெரியாதென்று கருதிப் பாலைக் களவு செய்வதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர் .

ஒண்ணுதல் - அழகிய நெற்றியையுடைய பெண். கரவு - திருட்டு. பூசை - பூனை. பயன் - பால்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Dec-22, 9:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே