மனம் துடிக்கிறது

மரணம் கூட என்னை கொண்டு செல்ல மறுக்கிறது உன் நினைவுகளுடன்..!

உன்னை பிரிந்து வாழும் இதையம் உன் நினைவுகளை பிரிக்க மறுக்கிறது என் உயிருடன்..!
உடலை பிரிந்த என் உயிர் உன்னை பிரிய மறுக்கிறது உன் உயிரில் கலந்த உறவுடன்..!
உன் உறவை மறுக்க முடியாமல் என் மனம் துடிக்கிறது வலியுடன்..!
வலியை பொறுக்க முடியாமல் என் கண்கள் கலங்குகிறது கண்ணீருடன்..!

எழுதியவர் : த.பிரவின் குமார் (18-Jan-23, 3:25 pm)
சேர்த்தது : பிரவின் குமார் த
Tanglish : manam thudikirathu
பார்வை : 96

மேலே