புத்த கத்தைத் திருப்பிப்பார் பூக்கும் இன்பத் திருப்புகழே - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
முத்தைத் தருவென் றினிதெனவே
..முதலில் சொல்லி அருணகிரி
முத்துத் தமிழில் பாட்டிசைத்தான்
..முழுதும் இனிக்கும் திருப்புகழால்
தித்திப் பாகத் தினம்பாடத்
..திகட்டும் இனிப்பே நாவெல்லாம்
புத்த கத்தைத் திருப்பிப்பார்
..பூக்கும் இன்பத் திருப்புகழே!
– வ.க.கன்னியப்பன்