மெல்லி யலிற்சொல்லி மேலு மெழுதினேன் - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
(1, 3, 5 சீர்களில் மோனை)
மெல்லி யலிற்சொல்லி மேலு மெழுதினேன்
..மேன்மையினை;
சொல்லிற் செதுக்கினேன் சொப்பனத் தில்நானுஞ்
..சொக்கிநின்றேன்!
தொல்லையே நல்கிடாத் தூங்காக் கனவதன்
..தூபமென
எல்லை யிலாப்பல வின்பங்கள் கொண்டே
..னெழிலெனவே!
- வ.க.கன்னியப்பன்