கமலமும் காதலியும்
பொய்கையில் குவிந்த கமல மொட்டுக்கள்
வைகறையில் கதிரவன் மென்கிரணம் கரம்
பட்டு சிலிசிலிர்த்து மெல்ல மெல்ல
மலர்ந்து முடிவில் முழுவதுமாய் அலைமகள்
என்றும் விரும்பும் மலராய் அவள்
கரங்களில் நித்திய வாசம் செய்வதுபோல்
காதலன் கைவிரல்கள் பட்டு நாணத்தால்
காதலி புன்முறுவல் கொள்வது காதலன்
மனதில் அக்கமலம் போல் மலர்ந்தே
அவள் வாசம் செய்கின்றாள் இப்படித்தான்
கவிஞன் என்மனதில் இளஞ்சூரியன்
தடாகத் தாமரையை நெகிழவைப்பது தோன்றியது