280 இவறியான் பொருளை எல்லாரும் தமதென்பர் – கடும்பற்று 9

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

தமதென உலோபர் ஈட்டுந்
தனத்தினைக் கொடுங்கோன் மன்னர்
எமதென இருப்பர் கள்வர்
எமதென்பர் கிளைஞ ரெல்லாம்
உமதெம தெனவா திப்பர்
உலகென தென்னும் யாமும்
நமதென்போம் பாரம் தாங்கி
நலிவதென் பிசின ரம்மா. 9

– கடும்பற்று, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தமக்கே என்று செட்டுத்தனம் உடையவன் (கஞ்சன்) பேராசையால் சம்பாதித்த பணம் முழுவதும் கொடுங்கோல் மன்னர் தமதென்பார். கள்வர்கள் எமதென்பர். உறவினர்கள் ஒருவரோடொருவர் அப்பணத்தைக் உனது எனது என்று வாதாடுவார்கள். உலகிலுள்ள பிறரும் தன்னுடையது என்று சொல்வர். நாமும் நம்முடையது என்போம். இத்தகைய பாரத்தைச் சுமந்து நலிய வேண்டிய அவசியமென்ன சொல்லுங்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

இவறல் – சிக்கனம், செட்டுத்தனம், இவறியான் - செட்டுத்தனம் உடையவன்,
வாதிப்பர்- வாதாடுவர். பாரம் - சுமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-23, 7:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

சிறந்த கட்டுரைகள்

மேலே