மகனே..

விரல்களை கொண்டு
மரப்பை திற
கொங்கையில் வாய்வைத்து
உறுஞ்சி உதிரத்தை..

முடிந்ததும் முகத்தினை
மார்போடு மோதி
பெருமூச்சு விட்டு
இன்பம் கூடுமடா..

செல்லமாக ஒருகடி
சிரித்தபடி கிறல்
பேசும் தருவாயில்
உறக்கம் அடடா..

கழுத்தொடு பின்னும்
உன் கரங்கள்
கவலை மறக்கும்
என் நெஞ்சம்..

ஆனந்தத்தை எப்படி
அளக்க நான்
கண்ட இன்பத்தை
எப்படி செல்ல..

தொப்புள் கொடி
கண்ட காயம்
தொடருமட
இந்த பாசம்..

துளையாமல் நீஇரு
பிரபஞ்சம் பேசுமட
நம் அன்பின்
ஆழத்தை..

ஆழகடலும் அகண்டு
வழி விடுமட
அன்பு மகனே..

எழுதியவர் : (21-Feb-23, 11:11 pm)
Tanglish : makanae
பார்வை : 58

மேலே