செம்மலராள் என் காதலி 2
தும்மினேன் என்னை மனம்நிறைய வாழ்த்தினாள்
தும்மல்ஏன் வந்தது யார்நினைத்து சொல்லென
விம்மி அழுதனள் கண்ணைத் துடைத்தவாறே
செம்மலராள் என்கா தலி
---"விம்மி உடனே துடைத்து அழுதனள்" என்று முந்திய பதிவில்
எழுதியிருந்தேன் அழுதபின்தானே கண்ணீரைத் துடைத்துக்
கொள்வார்கள். பொருள் தவறல்லவா . இலக்கண அமைதி இருந்துவிட்டால் மட்டும் போதாது பொருள் முக்கியம் பொருள் சிதைந்த கவிதை வெறும் இலக்கணத்தை வைத்து மிளிராது .
வள்ளுவர் இரண்டடியில் காதலர் ஊடலை எவ்வளவு அழகாக
சுருக்கமாக சொல்லியிருக்கிறார்
மூலக் குறட் பா :---
வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று