நாலுமுக சாமியைய்யா
நாலுமுக சாமியைய்யா நல்லாசி தாருமைய்யா
நாலுபேரை போற்றியொரு பாட்டெழுத வேணுமைய்யா
நாலுவேதம் தந்தவரே நான்படிச்ச தில்லையய்யா
நாலுவேதம் கற்றவர்க்கு நல்லபேரு இல்லையய்யா
நாலுமதம் இங்கிருக்கு யார்பெரிசு சொல்லுமய்யா
நாலுவர்ணம் உள்ளமதம் பேருகெட்டு போனதைய்யா
நாலுபேரை கேட்டுவிட்டேன் செத்துயிங்கு போனபின்னால்
நாலுபேரு தூக்குகிற காலமினி இல்லையைய்யா
நாலுபேரு கூடுகிற ஆலயத்தின் சாமிமுன்னே
நாலுவேதம் கற்றவரே குற்றமங்கு செய்ததனால்
நாலுதிக்கும் நாறுதைய்யா நாலுதிக்கும் நாறுதைய்யா
நாலுவரி பாட்டெழுதி போற்றிபலன் இல்லையய்யா
நாலுபெண்கள் சொர்க்கமங்கு நாட்டியங்கள் ஆடுறதா
நாலுபேரு சொன்னதனால் தீராத ஆசையைய்யா
நாலுமுக சாமியையா காட்டியதை தந்துவிட்டால்
நாலுவரி பாட்டெழுதி போற்றியுமைத் தாறேனையா
வெங்கடாச்சலம் தர்மராஜன்