கண்ணன் நிறம்
கண்ணிருந்து தானென் பயன் கண்ணன்
வண்ண வண்ண நிறம் கண்ட
பின்னும் வேறு வண்ணம் காண
மனதாலும் நினை ப்பது
மன்னன் அவன் நீல உடல்
சிரிக்கும் அவன் சிங்கார வதனம்
கொவ்வை செவ்விதழ்கள் முத்து பற்கள்
மஞ்சள் பட்டாடை மயில்பீலி மகுடம்
வண்ண வண்ண காட்டு மலர்மாலை
செந்தாமரைப் பாதங்கள் இப்படி
வண்ணமயம் இவன் மாய தோற்றம்
ஒளிப்பிழம்பு இவன் பார்ப்பவர் கண்ணிற்கு
என்றும் 'ஸத்-சித்-ஆனந்த விக்கிரஹம்
எவ்வடிவில் பக்தர் காண நினைக்கும்
அவ்வடிவில் வந்து கண்முன்
நிற்கும் அனந்த மயன் அவன்