நல்லது செய்வான்
தெய்வத்தை வழிபட்டு
வேண்டி நின்ற மக்களுக்கு
இறைவன் சொன்னான்—நீங்கள்
இருக்கும் இடத்திலெல்லாம்
இயன்ற பொழுதெல்லாம்
இல்லாத மக்களுக்கு
இல்லையென்று சொல்லாமல்
வயிற்றுக்கு உணவளித்து
வாழும் உயிர்களைக் காத்திடுங்கள்
காலம், காலமாய்
கூடவே வரும் தெய்வங்கள்
மனிதர்களைப்போல்
மறக்க மாட்டார்கள் ஒருபோதும்,
இறைவன் வேண்டியதை.
அவன் நினைத்தபடி
நாமும் செய்து முடித்தால்
நமக்கும் இறைவன்
நல்லது செய்வான்