சங்கமம்

சங்கமம்

நித்தம் அவள்
நினை வலைகள்யென்
நெஞ்சினில் மிதக்கும்...

நிலவு முகந்தனை
முகராமல் முகர்ந்தேன்
முகிலென அணைத்தேன்...

முன்நெற்றி குழல்
ஒதுக்கி குறும்புடன்
இதழ் ஒற்றிடுவேன் ....

நானமது ஓங்க
இமை கவிழ்ப்பாள்
அழகி யவள்...

லேசான அதிர்வில்
இதமாய் வீணை
மீட்டுமென் னிதயம்...

நித்தம் அரங்கேறும்
நாடகமது, எமதுவிழிகள்
சங்கமிக்கும் சாகரமது....

சுகமாய் நனைத்திடும்
காதல்மழை, இதமாய்
தழுவிடுவேன் ஆருயிரை...

எழுதியவர் : கவிபாரதீ (19-Apr-23, 2:07 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : sankamam
பார்வை : 167

மேலே