இறைவனிடம் ஓர் வேண்டுகோள்

காலையில் தடாகத் தாமரைப் பார்த்தேன்
கதிரவன் ஸ்பரிசம்பட்டு அழகாய் அலர்ந்து
ஐயகோ மாலையில் இப்பூ வாடிடுமே
மாலையில் குளத்தில் குமுதம் கண்டேன்
சந்திரன் அரவணைப்பில் அலர்ந்த அழகாய்
ஐயகோ காலையில் இப்பூவும் வாடிவிடுமே

அதோ வருகின்றாள் என்னவள் மலர்விழியாள்
அழகு பதுமை போல் நடந்து வருகின்றாள்
இறைவா இவள் அழகைக் குன்றாது இருக்கவிடு
அலர்ந்தே எழிலாய் இருக்கும் கமலமாய்
இரவில் மலரும் அல்லிப்பூ வாய்
ஆனால் என்றுமே வாடா பூப்போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Apr-23, 11:48 am)
பார்வை : 132

மேலே