எண்ணமும் நகமும்
மனிதன் மனதில்
எண்ணங்கள்
விரல்களில் வளரும்
நகங்களைப் போல்
வளர்ந்திட வேண்டும்
விரல்களை தாண்டி
வளரும் நகங்களை
அவ்வப்போது
வெட்டுவதைப் போல்
மனதில் தோன்றும்
தீய எண்ணங்களையும்
அவ்வப்போது
வெட்டிவிட வேண்டும்...!!
--கோவை சுபா