உறவில் உரசல்
உறவுக்கு கை கொடுப்போம்
இந்த வார்த்தைகளை
எந்தன் மனசுக்குள்
சொல்லிப் பார்த்தேன்
சுகமாக இருந்தது
நிஜத்தில் சாத்தியமா....
சிந்தித்தேன்..
எல்லைக்கு அப்பால் இருக்கும் உறவுகள்யெல்லாம்
உரசல் இல்லாம சுகமாக இருக்கு
உறவுகள் நெருங்கும் போது
உள்ளங்களில் தேவையற்ற
உரசல்கள் உருவாகி முடிவில்
விரிசல்கள் விஞ்சி நிற்பதே நிஜம்..!
--கோவை சுபா