பேரழகி..//

எதிரெதிரே காண்கையில்
இரு விழிக்குள்
நுழைந்து இதயத்தை
ஏதோ செய்கிறாள்..//

உன்னை காண்கையில்
கம்பனும் சொக்குவானடி
நான் மட்டும்
எப்படி சொல்லிவிட..//

தமிழ் என்னும்
ஆழிக்குள் ஆராய்ந்து
பார்க்கிறேன்
அடடா இவ்வளவு வார்த்தைகள் கொட்டி கிடக்கிறது பாங்கி..//

என் சிந்தனை
முழுவதும் உன்னை
சித்தரிக்கவே பயன்படுத்துகிறேனடி
சகியே..//

எழுதியவர் : (5-May-23, 5:48 pm)
பார்வை : 69

மேலே