என்நந்தவனத் தேர்உனக்கு

போர்தொடுக்கும் வேள்பாரி ஒருநாள்
வீதிவழி வரும்போது
தேர்கொடுத்தான் வள்ளல் மனமிரங்கி
வாடிய முல்லைக்கு
யார்நிகர் பூவிற்கும் இரங்குமிவன்
போலென்று தப்பாது
கார்கொடுத்தது வான்கொடை மும்மாரி
வள்ளல்பாரி நாட்டில்

வேள்பாரி கொடுத்தான்தேர்
முல்லைப் பூவிற்கு
வேள்கவி நான்கொடுத்தேன்
முல்லைப்பூ சூடிட
என்நந்தவனத் தேர்உனக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (6-May-23, 9:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே