அன்பின் கணம்

அன்பின் கணமே நீ!
பாசத்தின் முதற்கண் நீ!
அன்பின் முதற்படி நீயே என் தாயே!
பத்து மாதம் கருவில் சுமந்து பெற்ற்றெடுத்த நீயே!
நல்லதொரு பெற்றோராய் அமைந்த என் தாய் தந்தையே
உம்மை வணங்குகிறேன்.

சினமொன்று இல்லையே உங்கள்மேல்,
நல்லதை கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் நீரே!
மதிக்க கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் நீரே!
அன்பைக் கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் நீரே!
சிந்திக்க கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் நீரே!

ஆயுட்காலங்கள் மாறினாலும் சூழ்நிலைகள் மாறாது,
வாழ்க்கை நன்றாக இருந்தாலும் மகிழ்ச்சி ஒன்றுதானே,
ஆயுள் முழுவதும் கடவுள் கையில் வாழ்ந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதானே, நீரே எம்மோடு,
தாயே தந்தையே உம்மை வணங்குகிறேன்.

எழுதியவர் : மோ. ஹெட்ரிக் லெவின் (6-May-23, 7:19 pm)
Tanglish : anbin kanam
பார்வை : 355

மேலே