திமிரானவள்..//
அன்பைக் காட்டிலும்
அதிகம் படைத்து விட்டான்
இவளுக்கு திமிரை..//
திமிரைக் கொண்டு
ஆதிக்கம் செய்கிறாள்
அன்பு காட்டுபவர்களிடமே..//
யார் எவர்
என்ன தெரியாதுவரிடம்
கூட கோபத்தை
தான் காட்டுகிறாள்..//
நன்கு பழகியவரிடம்
தான் தன் அதீத
திமிரை காட்டுகிறாள்..//
ப. பரமகுரு பச்சையப்பன்