மெய்ஞானம்
வானத்தை அன்னாந்து பார்த்து வியந்தேன்
சந்திர சூரியர் இன்னும் எண்ணிலா தாரகைகள்
மற்றும் கோள்கள் பல பலவென்று
பரவி இருக்க எல்லை இல்லா
பேரானந்தமாக
கண்களுக்கு தெரியும் அற்புதங்கள் இவை
கோடான கோடி ஆண்டுகளாய் இயங்கிவரும்
அற்புதங்கள்
கண்ணிற்கு புலனாகா பலகோடி விநோதங்கள்
வானத்தில் அடங்கி இருக்கின்றன என்று
விஞானம் கூற
இவற்றை படைத்தவன் யார் என்று
எண்ணவைத்தான் ஒருவன்
அவனே இறைவன் என்று தெளிந்தேன்
விஞானம் காட்டிய மெய்ஞானம்