மதிபோல் நதிபோல் நடப்பாள் சிரிப்பாள்

நதியோர நீரலைகள் நீந்திவெண் மணல்தன்னைத் தழுவிடும்
மதிநிறைந்து தோட்ட மலர்களை முத்தமிட்டு மகிழும்
மதிபோல் நதிபோல் நடந்து வருமெழில் இவளை
பொதிகைத் தமிழால் பாடு கவிஞனே புன்னகைப்பாள்
நதியோர நீரலைகள் நீந்தித் தழுவ
மதிநிறைந்து முத்தம் மலர்களுக்கு நல்க
மதிபோல் நதிபோல் நடப்பாள் சிரிப்பாள்
பொதிகைத் தமிழினால் பாடு
நதியோர நீரலைகள் நீந்திட
மதிநிறைந்து முத்தம் மலர்களுக்கு
மதிநதிபோல் நடப்பாள் சிரிப்பாள்
பொதிகைத்தமி ழினால் பாடு
நதிநீரலை நீந்திட
மதிநிறைபூ முத்தமிட
மதிநதி இவள்சிரிப்பை
பொதிகைத்தமி ழால்பாடு
---இலக்கிய அழகுடன் பாவினம் பாவின் அடையாளுத்துடன்
யாப்பெழிலையும் பயில்வோர் கண்டு ரசித்து பயன் பெறலாம்