உனக்கானவள்..
பட்டோளி வீசும்
வெள்ளி நிலவே..
என் அதீத
அன்பில் மூழ்கியவளே..
அடுத்த கணமே
இம்சைகளில் இளைப்பாரிவளே..
குசும்புகள் உன்னை
கொல்லாமல் கொல்லுமடியே..
நீயும் சாகாமல்
சாகிறாயே கண்மணியே..
எத்தனை நாட்கள்தான்
இப்படி வாழ்வதோ..
முத்தத்தை கூட
மொத்தமாக தருகிறேனே..
வாங்காமல் வாங்கி
துடிதுடிக்துப் போகிறவளே..
இரவுகள் நீல
அவள் இதயம்தான்
காரணமாகிறதே..
பரமகுரு பச்சையப்பன்