எனது ஆலயம்

எனது ஆலயம் :- பாகம் 2
+++++++++++++

(புனிதர் குழந்தை தெரேசா வரலாறு/

பிரான்ஸ் நாட்டில் அலென்சோனில் 1873 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 3 ஆம் நாள் திரு. லூயி மார்டின் திருமதி. செலி மார்டின் என்ற தம்பதியினருக்கு மகளாக பிறந்தார்.

இவருடைய திருமுழுக்கு பெயர் மரிய பிரான்சுவா தெரசா மார்டின் என்பதாகும்.

தன் நான்காவது வயதில் தாயை இழந்ததால், அவரது தந்தையும், மூத்த சகோதரியும் அவரை வளர்த்தனர்.

தெரசா குழந்தை இயேசுவை அதிகம் அன்பு செய்தார். வாழ்வில் சோர்வுறும் போது குழந்தை இயேசுவிடம் செபித்து ஆறுதலும், ஆற்றலும் அடைந்தார். அன்பு, அமைதி, பொறுமை, தாழ்ச்சி இவைகளுக்குச் சொந்தக்காரர். தெரசா ஒரு நாள் செபம் முடித்து புத்தகத்தை மூடுகையில், பாடுபட்ட இயேசுவின் ஒரு படம் பாதி வெளியே நழுவி இருந்தது. அதில் துளையுண்டு இரத்தம் சிந்தும் கிறிஸ்துவின் கரம் அவர் கண்ணுக்குப் புலனாகியது. தெரசா அதுவரை அனுபவிக்காத ஒருவகை உணர்ச்சியில் மூழ்கி மெய்சிலிர்த்தார். அந்த தெய்வீக இரத்தம் ஒழுகி கீழே விழுவதும், அதைச் சேர்த்துவைக்க யாரும் முயற்சி செய்யாதிருப்பதைப் பார்த்து நெஞ்சம் நைந்தார். மீட்பின் ஊற்றான அந்த தெய்வீக இரத்தத்தைச் சேர்த்துவைத்து, ஆன்மாக்களின் மீது அதைப் பொழியும் பொருட்டு, என் வாழ்வு இனி சிலுவையின் அடியிலே அமையும் என்று அன்றே முடிவு செய்தார். அந்நேரம் முதல் இயேசுவின் இரத்தத்தைச் சேகரித்து ஆன்மாக்களின் மீட்புக்காக ஒப்புக்கொடுக்க தன் வாழ்வை கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்தார்..

தொடரும்....

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (16-Jun-23, 6:20 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : enathu aalayam
பார்வை : 40

மேலே