கருவிலேயே கலைந்து இருப்பேனே!!!

கருவிலேயே கலைந்து இருப்பேனே!!!
கற்பனையில் வாழ்ந்திருக்க மாட்டேனே!!!

நன்றி கெட்ட மனிதர்கள் வாழும்
நல்ல தொரு நாடிது என்றும்
கள்ள நட்பு கொண்டு உள்ளத்தில்
கயவர்கள் வாழும் நாடிது என்றறிந்திருந்தால்...

கருவிலேயே கலைந்து இருப்பேனே!!!
கற்பனையில் வாழ்ந்திருக்க மாட்டேனே!!!

வெள்ளை உள்ளம் கொண்ட எனக்கு
கொள்ளை எண்ணம் படைத்தவரும்
தொல்லை குணம் கொண்டவரும்
எல்லையின்றி அமைவது தெரிந்திருந்தால்...

கருவிலேயே கலைந்து இருப்பேனே!!!
கற்பனையில் வாழ்ந்திருக்க மாட்டேனே!!!

பணம் பணம் என்று அலைந்து
தினம் தினம் திரிந்து திரிந்து
குணம் மாற்றிக் கொண்டவர்கள்
கயவர்கள் கூடாரமிது என அறிந்திருந்தால்…

கருவிலேயே கலைந்து இருப்பேனே!!!
கற்பனையில் வாழ்ந்திருக்க மாட்டேனே!!!

காதல் காதல் என்ற பெயரில்
காம களி ஆட்டம் கொண்ட
கழிவுகள் அதிகம் நிறைந்த
கற்கால கூட்டமிது என அறிந்திருந்தால்…

கருவிலேயே கலைந்து இருப்பேனே!!!
கற்பனையில் வாழ்ந்திருக்க மாட்டேனே!!!

ஏழையை ஏமாற்றி வயிற்றில் அடித்து
ஏற்றம் பெற்று வாழும் கூட்டமென்றும்
சாலை போடும் பணத்தைக் கூட
சாப்பிடும் சதிகாரர்கள் என்று தெரிந்திருந்தால்....

கருவிலேயே கலைந்து இருப்பேனே!!!
கற்பனையில் வாழ்ந்திருக்க மாட்டேனே!!!

உயிரின் உன்னத விலையறியாது
உயிரெடுக்கும் கொலைகாரர்கள்
தலைக்கு விலை பேசி வாழும்
தவறான மக்களுள்ள நாடிது என தெரிந்தால்...

கருவிலேயே கலைந்து இருப்பேனே!!!
கற்பனையில் வாழ்ந்திருக்க மாட்டேனே!!!

சிலை வைத்து கும்பிடும் உலகில்
சிலை திருடும் கும்பலும் கண்டு
கலை வாழும் இப் பூவுலகில்
களைகளுள்ள நாடிது என தெரிந்திருந்தால்...

கருவிலேயே கலைந்து இருப்பேனே!!!
கற்பனையில் வாழ்ந்திருக்க மாட்டேனே!!!

- கவிமகன்

எழுதியவர் : கவிமகன் (14-Oct-11, 12:33 pm)
பார்வை : 373

மேலே