ஏழ் என்னும் எண்ணின் மகிமை
வையமேழு வண்ணமேழு மாமுனிவரெழுவர்
வையத்தில் வாழ்வோர் பிரயாயங்கள் ஏழாம்
குணங்களும் ஏழாம் சுரங்களும் ஏழு
கடல் ஏழாம் தீவுகளும் ஏழே
நகரங்கள் ஏழு மாமலைகள் ஏழு
ஞானியரை இயக்கும் சக்கரம் ஏழாம்
பிராம்மி ஆதி கன்னியர் எழுவர்
நமக்குயிர் அளிக்கும் வெய்யோன் பரியேழு
பகா எண் ஏழு பகுத்தறிவு கடந்த
ஆன்மீக சக்திவாய்ந்த எண் என
'எண் ஜோதிடம்' கூற்று