என்னவன்

நிழலாய் என்தன் மனதில்
நிறைந்த நிதர்சனம் - அவன்

நீக்கமற நிறைந்திருக்கும் எந்தன்
மனதின் ஆனந்தம் - அவன்

என் ஆழ்மனதின் அகற்ற
இயலா கனவு - அவன்

நித்திரையில் நித்தம் வந்து
முத்தமிடும் நிழல் - அவன்

கலப்படம் அற்ற கனிந்த
அன்புக்கு இலக்கணம் - அவன்

கார்முகில் நிலவையும் விழியால்
நிறம் மாற்றுவான் - அவன்

என்னிதய வீணையை நித்தம்
மீட்டும் கலைஞன் - அவன்

என்னுள் நிறைந்திருக்கும் சகலமும்
அவனின்றி வேறில்லை - என்னவன்.

எழுதியவர் : கவிபாரதீ (27-Jul-23, 5:46 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : ennavan
பார்வை : 372

மேலே