சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 15

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 15
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புன்னைவனம்
°°°°°°°°°°°°°°°°°°°
சிந்தித்த வேளையில்
சிவசக்தி திருமணக் கோலத்தை
சுயரூபமாகக் கண்டவர்
சித்தர்களில் மூத்தவர்
சித்த வைத்தியத்தின்
சிகரமானக் குள்ளமுனிவர்
சோழ நாடு
சோறுடைத்த காவேரியைத் தந்தவர்
சிவனிடம் தமிழ்க் கற்று
சீர்மிகுத் தமிழுக்கு அகத்தியம் தந்தவர்
வாழ்ந்திடும் பாரதத்தின் தென்பகுதியில்

வளர் மலைப் பூங்குளத்தில்
வெளிவரும் சுனை நீர்
வளைந்தோடி விளையாடி
வடிந்து நதியாக
வளம் தர
வலம் வரும்
வற்றாதத் தாமிரபரணியையும்

பசுமைக்குள் சுகமளிக்கும் மூலிகையும்
பாயினம் மாவினம் உயிர் வாழும்
பொதிகை மலை அடிவாரத்தில்
பூவுக்கொரு அரசன் பூத்திடும்
புன்னை மரத்தைச் சூழ்ந்து

சுற்றி வளைந்தாடும் கொடிகளை வாரி
சுற்றி அணைத்து தவழும் தென்றல்
மொட்டுகளிடம் நடந்து சென்று
மலர்ந்திடத் தூண்டி மலரும் பூக்களில்

விழுந்திடும் மார்கழிப் பனித் துளி
விளிம்பினை மடியாகக் கொண்டு தூங்கிடும்
அழகினை ரசித்து ஆலிலைச் சிவக்கும்
அழகியப் புன்னைவனத் தோட்டத்திற்கு
அம்பாள் வந்தாள் தவமிருக்க..

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Jul-23, 5:55 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 16

மேலே