அது காதலில் என்பதால்

சிலைபோல் நீ நடந்து வரும் மாலைகளில்
நிலவுக்கு விடுமுறை கொடுத்து விடலாம்
உன் கருங்கூந்தல் தழுவும் தென்றலுக்கோ
கொடைக்கானல் கொண்டாட்டம்
உன் இருவிழிகளின் பனிக்குளிர் பார்வை
எனக்கு உதகமண்டலம்
அது காதலில் என்பதால்....
என்னுள்ளே இனம் தெரியாத ஒரு குதூகலம்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Aug-23, 2:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே