அணிலா - தென்றலா

தென்றல் எங்கே தேனப்பன்?
@@@
தென்றல் மாலை வேளையில் வீசும். தென்றல் என் பிடியில் இருக்கிற‌ மாதிரி "தென்றல் எங்கு"னு கேட்கிறது சரியா மாரியப்பா?
@@@###
தேனு உங்கள் வீடு தெற்கு வாசல்படி. வடக்குப் பக்கம் பின் படிக்கக் கதவு. உங்க வீட்டிலே தென்றலுக்கும் இடமுண்டு; வாடைக் காற்றுக்கும் இடமுண்டு. அது சரி. உங்களுக்குச் சொந்தமான தென்றல் எங்கடா தேனப்பன்?
@######
தென்றல் எங்கள் சொத்தா, மாரி? எங்கள் வீட்டிலயா அடைச்சு வச்சிருக்கோம்.
@@@@@@
தென்றலை அடைச்சு வைக்கல. அனுப்பிவச்சிருக்கிறீங்க.
@@@@#@
எங்கே?
@@@@#@
பள்ளிக்கூடத்துக்கு.
@@@@@#
தென்றல் படிக்குமா?
@@@########
ஐந்தாம் வகுப்பு படிக்கும்!
@@@@##
என்னடா மாரி உளறுகிறாய்?
@@@####
நானா தேனு?
@@@@@@#
ஆமாம்.
@@#####
உங்கள் வீட்டில் ஐந்தாம் வகுப்புப் படிக்கிறது யாரு?
@@#######
அணிலா!
@@@@##
அணிலா. அந்தப் பேருக்கு என்னடா தேனப்பன்?
@@##@@@
உலகத் தமிழர் எல்லாம் அவுங்க பிள்ளைகளுக்கு இந்தி அல்லது சமஸ்கிருதப் பேருங்களையோ அல்லது அந்த மொழிகளின் பெயர்கள் மாதிரி உள்ள பேருங்களையோ உருவாக்கி அந்தப் பேருங்களை அவுங்க பிள்ளைகளுக்கு வைக்கிறாங்க. இது உலகத் தமிழர் வழக்கம். ஐந்து வருசத்துக்கு முன்னாடி எங்கள் பெண் குழந்தை பிறந்துச்சு. அந்தக் குழந்தைக்குத் தமிழ்ப் பேரை வச்சா நம்ம மக்கள் கேவலமா நினைப்பாங்க. சோதிடம் தெரிஞ்ச ஒரு இந்தி ஆசிரியர்கிட்ட எங்க பெண் குழந்தைக்கு அவள் இராசிக்குப் பொருத்தமான சமஸ்கிருதப் பேரை வைக்கப் சொல்லிக் கேட்டோம். அவர் தான் "'அணிலா"'ங்கஇற பேருதான் உங்க பெண் குழந்தைக்கு பொருத்தமான பேரு"னு சொன்னாரு. அந்தப் பேருக்கு என்ன பொருள் (அர்த்தம்)னு கேட்டோம். "அதைப் பற்றி ஏனப்பா தேனப்பா கவலைப்படுகிறாய். பெரும்பாலோர் பெயர்களின் பொருள் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதுபோல நீயும் போய் அந்தப் பெயரை உன் மகளுக்குச் சூட்டு" என்றார்.
@@####
தேனப்பா, 'அணிலா'வுக்கு நான் பொருள் சொல்லறேன்.கேள். 'அணிலா'ன்னா 'தென்றல்' என்று பொருள். சோதிடரைத் தேடிப் போயி அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து பேரைக் கேட்டதுக்கு உன் மகளுக்கு 'தென்றல்'ங்கிற அருமையான தமிழ்ப் பேரை வச்சிருக்கலாமே?
@@#######
என்னை இன்னும் நீ புரிஞ்சுக்கவே இல்லடா மாரி. தமிழ்ப் பெயர்களை பெற்ற பிள்ளைகளுக்கு வைக்கிறதை கேவலமா நினைக்கிற இந்த தமிழ் சமுதாயத்திலே ஊரோடு ஒத்து வாழறதுதான் மதிப்பு. அதை நாங்கள் எப்படி இழக்க முடியும்?
##########
உம்.‌ சரி, சரி.
@@@######@@@@@@@@@@@@@@@@@@@
Anila = Breeze

எழுதியவர் : மலர் (12-Aug-23, 4:05 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 61

மேலே