சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 60

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 60
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரநாராயணர் தலமும் கம்பராமாயணமும் : பாகம் 3
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்ரகூட மலையின் அருகில்
மந்தாகினி நதிக் கரையில்
தாயின் மடிக் கன்றாக
சீதையின் மடியில் ராமன்
அயந்து இளைப்பாறும் வேளையில்

அந்த வழியே வந்த
இந்திரனின் மகன் சயந்தன்

தேன் சுவைக்கப் பூக்களை சுற்றும்
வண்டுகள் மொய்க்கும் கூந்தலைக் கொண்டவள்
இருமலை இடையில் குமரியின் அலைமேல்
எழும் சிவந்த சூரியனின் பிரகாசமான

முகத்தில் புருவங்கள் இரு வில்களாக
கண்கள் நீர்நிலை கயல் மீன்களாக
முல்லை அரும்பு மலரும் புன்னகையும்
பூக்கொம்பினை போன்ற சிவந்த
பொன் மேனி உடைய சீதையை

கண்டவுடன் காமம் கொண்ட சயந்தன்
சீதையை தீண்டிட ஆவல் கொண்டு
காக்கை உருவம் தரித்து பறந்து
சீதையின் மார்பில் கொத்திட

துளையிடும் பூமியில் வழிந்தோடும் நீராக
சீதையின் மார்பில் குருதி பெருக்கெடுக்க
அசைந்தால் சப்தமிட்டால் கணவன் எழவான்னென
பூமியாக துன்பத்தில் பொறுமை கொண்டாள்

இருள் எழுமுன் எழும் சந்திரனாக
இளைப்பாறி எழுந்த ராமன் கண்டிட்டான்
சீதையின் மஞ்சள் மேனியில்
அந்திமாலை செவ்வானமாக குருதி வழிந்தோட
காரணம் கேட்டான் காகத்தைக் காண்பித்தாள்

ராமன் புரிந்து அருகினிலிருந்த புல்லை
பறித்து மந்திரம் சொல்லி விடுத்தான்
ராம பானமாக உருவெடுத்து சயந்தனை
மூவுலகும் துரத்திடக் காப்பார் யாருமில்லை....

சங்கரநாராயணர் தலமும் கம்பராமாயணமும் பாகம் 4 நாளை....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (16-Sep-23, 5:30 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 14

மேலே