கண்ணிமைக்கும் நேரத்திலே

கண்ணிமைக்கும் நேரத்திலே
****** ***** *** ****** **********
புழுக்கம் தாளாமல்
தவிக்கும் விசிறிக்கு
மேனி வியர்க்கத் தொடங்கும்
இதயக் கோயிலில்
அதிசயமாய் அவசரமாய்க்
காதலின் கொடியேற்றம் நிகழும்
கனவுகளின் தேசத்தில்
ஆயிரம் பட்டாம்பூச்சிகளின்
அணிவகுப்பு நடக்கும்
மகிழச்சித் திருநாளைக் கொண்டாடும்
மனசுக்குள் மத்தாப்பு பூக்கும்
திடீர் வானிலை மாற்றம் கண்டு
குடைக்குள் மழை
பெய்யத் தொடங்கும்
கானல் நீரான
வாழ்க்கை வெளியில்
ஆனந்தப் பேராறு
பெருக்கெடுத்துப் பாயும்
கட்டாந்தரை
பசுமைச் சேலை அணிந்து
கண்களைக் குளிர்விக்கும்
மனசுக்கு சிறகு முளைக்கும்
அமாவாசையாயினும் நிலா தோன்றும்
உணர்வுகளுள் பிரளயம் நிகழும்
உயிரினுள் மின்மினிப் பூச்சிகள்
வெளிச்சம் விதைக்கும்
தூக்கம் அவசர விடுமுறையில்
வெளிநாடு போகும்
காய்ந்த சருகில் விழுந்த தீயாய்
காதல் பற்றிக்கொள்ளும்
அவள்
கண்ணிமைக்கும் நேரத்திலே..
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Sep-23, 2:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 106

மேலே