ஈண சுவரங்கள்

ஈண சுவரங்கள்

அந்த மேடையில்
ஒருமுறை ஒரேமுறையே
என் குரல் கொண்டு ஒலித்தன
அந்த ஆரோகணங்கள்.
அந்த ஏழு ஸ்வரங்கள்.
ஏறநிமிறப் பார்த்த
உன் பார்வையின் திளக்கத்தில்
ஆனந்தம் இல்லை.
அன்றிலிருந்துதான்
இனி இதெதுவும் வேண்டாமென
தாகித்து
உன் பின்னாலிருக்கும்
தம்புருவின் சுருதியாகிவிட்டேன்.
அதிகக்காலம் கழித்து அழைக்கிறாய் ?
கெஞ்சுகிறாய்.?
என்றோ ஆன ஆழுறக்கத்திற்குள்
கைகளிளக்கி
என் குரலின் ஈணத்தை
தட்டி எழுப்புகிறாய்.
இன்றொரு நாள் மட்டும்
உனக்காக பாடு என்கிறாய்.
அன்றெப்போதும் இல்லாததைப்போல்
ஆக்கிரமிக்கத் தொடங்குகிறாய்.
இதெல்லாம் ஏன் செய்கிறாய் ம். ?
மெளனிக்கிறேன்.
நிறைய பேச்சிருந்தும்
ஏதும் பேசப்பிடிக்காததுபோல் அவசானிக்கிறேன்.
மெல்ல மெல்ல நீ என்னை
முழு ஊமை செய்துக்கொண்டிருக்கிறாய்.

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (22-Sep-23, 3:09 am)
பார்வை : 18

மேலே