விருத்த மேடை 82 - கண்டநற் காட்சி கவலையைப் போக்கும் - கலிவிருத்தம் 18

விருத்த மேடை 82
கண்டநற் காட்சி கவலையைப் போக்கும்!
கலிவிருத்தம் 18
இயற்சீர் வெண்டளையால் அமைந்த விருத்தம்
நேர் முன் நிரை, நிரை முன் நேர் இயற்சீர் வெண்டளையாம்.
இவ்விருத்தம் அடித்தோறும் இயற்சீர் வெண்டளை பெற்று வரும்.
ஒவ்வோர் அடியின் ஈற்றுச்சீர் மாச்சீராகும்.
நேரில் தொடங்கினால் 11 எழுத்துக்களும் நிரையில் தொடங்கினால் 12 எழுத்துக்களும் வரும். [ஒற்றுகளை நீக்கிக் கணக்கிட வேண்டும்]
(ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்)

செண்டில் இருந்திடும், சேற்றில் மலரும்;
வண்டுஞ் சுவைத்திடும், வாட்டமுஞ் சேர்க்கும்!
கண்டுங் களிப்பினிற் காட்சியு மாக்கும்;
கண்டநற் காட்சி கவலையைப் போக்கும்!

- வ.க.கன்னியப்பன்

இதுபோன்ற பாடலை கவின் சாரலன், சக்கரை வாசன், வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன், பழனிராசன் ஆகியோர் முயற்சிக்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Sep-23, 10:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே