சின்ன சின்ன ஆசைகள்

சின்ன சின்ன ஆசைகள்
×××××××××××××××××××××
வானவில்லில் யெடுத்த
வண்ண மையை
கண்யிமையில் உதட்டால்
தீட்டிட நப்பாசை

வெற்றிலைப் போட்டு
சிவந்த நுனிநாக்கால்
கன்னக் குழியிலே
பல்லங்குழியாடப் பேராசை

கொடியிடைப் பள்ளத்தில்
வியர்வைத் துளியில்
உள்நீச்சல் அடித்து
முத்தெடுக்க ஆசை

சலங்கையின் மணியாகி
கால் பிடித்து
காதோரம் மெல்ல
காதலைச் சோல்லிடயாசை

நிலவே உன்னை
மோகமதில் இரையாக்க
மேகமமெனும் வலையிலே
பிடித்திடவே ஆசை..

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (27-Sep-23, 9:26 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 113

மேலே