அவன் பாடிய பாட்டு
பார்வை இழந்த பாடகர்
சபையில் களைகட்ட பாடிக்கொண்டிருக்கிறார்
உளமுருகி கண்ணன் கீதத்தை ......
அவரில் ஓர் உற்சாகம் தெரிந்தது
கண்களில் ஆனந்த கண்ணீர் பெறுக
முகத்தில் ஆனந்தம் பொங்கிடவே அவர்
பாடிக்கொண்டிருந்தார் .....
அவருக்கு பக்கவாத்தியம் மிருதங்கம்
அவர் எதிரே அமர்ந்த நான் வாசித்துக்கொண்டு
இதை நேரில் பார்த்தேன்
என்னுள் தோன்றியது
இவரின் இத்தனை ஆனந்தத்திற்கு காரணம்
இவரே இவர் பாடியதை ரசிக்கின்றாரா
என்று நினைக்க வைக்க...பின் ஞானம் பிறந்தது
அவர் ரசித்துக்கொண்டிருப்பது..
அவர் உள்ளத் திரையில் காட்சிதந்த
அவர் பாட்டின் நாயகன் கண்ணபெருமானே ...என்பது
ஆம் அறிய சிலருக்கு இறைவன் அகப்பார்வை
தந்து மகிழ்வானாம்....