அறிந்தம் தெரிந்தம்

டேய் கொள்ளுப் பேரா, நாகராசு உன்னோட மனைவிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து ஒரு வாரம் ஆகுது. சோசியரைப் பார்த்தயா? சாதகம் எழுதிக் குடுத்தாரா?
@@@@@@
பாட்டி, கொள்ளுப் பாட்டி. என்னை நாகராசுனு கூப்பிடுக் கொள்ளாதே. என் பேரு நாகராஜ் தான். தாத்தா பேரு நாகராஜன், எனக்கு நாகராஜ்-னு பேரு வச்சீங்க. என் பேரைக் கேட்கறவங்க எல்லாம் "என்னடா தமிழ்ப் பேரை வச்சிட்டிருக்கிறே? நீ உண்மையான தமிழன் தானா? தற்காலத் தமிழருக்கு அழகு பிறமொழிப் பேரையோ, குறிப்பா இந்திப் பேரையோ அல்லது இந்தி மாதிரி இருக்கிற ஒரு பேரை உருவாக்கி பிள்ளைகளுக்கு வைக்கிறத்துதான், நான் கல்லூரில படிக்கிறபோதே என் பேரை 'நாக்ராஜ்'ன்னு மாத்திட்டேன். இதை உங்களுக்குப் பல தடவை சொல்லிட்டேன். இருந்தாலும் என்னை நாகராசு-னு கூப்பிட்டு அசிங்கப்படுத்தறீங்க. இது நல்லா இல்ல பாட்டிம்ம. நான் 'நாக்ராஜ், நாக்ராஜ்'. நீங்க வேணும்னா சுருக்கமா 'நாக்'ன்னு கூப்புடுங்க.

நீங்க கேட்டதையே மறந்துட்டேன். என்ன கேட்டீங்க?
@@@@@@@@@@@@@
அடேயப்பா நாக்கு. உன்னோட இரட்டைப் பையன்களுக்கு சாதகம் எழுதிட்டு வந்தயா? சோசியர்கிட்ட என்ன பேருங்கள வைக்கிறதுன்னு கேட்டுட்டு வந்தயா?
@@@@@@@
சாதகம் அச்சடிச்சுக் குடுத்தாரு. அவுங்க இராசிப்படி பேரு வைக்கச் சொல்லி ஒரு பேரை மட்டும் சொன்னாரு.
@@@@@@@
அந்தப் பேரைச் சொல்லுடா நாக்குச் செல்லம். எங் கொள்ளுப் பேரா.
@@@@@@@@@@@
அவுரு சொன்ன பேரு 'அறிந்தம்'. அருமையான பேரு. இன்னொரு பையனுக்கு அதே மாதிரி பேரை நீங்களே வச்சுக்குங்கனு சொன்னாரு. அந்தப் பேரைப் பத்தி கடந்த மூணு நாளா யோசனை பண்ணிட்டிருக்கிறேன். அதே மாதிரி வேற பேரு நினைவுக்கு வரமாட்டங்குது கொள்ளுப் பாட்டி.
@@@@@@@@@@@

நீ பெரிய படிப்புப் படிச்ச் முட்டாள்டா நாக்கு, 'அறிந்தம்'. அதுக்குப் பொருத்தமான பேரு 'தெரிந்தம்'. எப்படி 'அறிந்தம், தெரிந்தம்'.
@@@@@@@@@
அருமை. அற்புதம். அட்டகாசம். கெத்தான, சத்தான பேரு பாட்டி.அறிந்தம், தெரிந்தம். அறிந்தம், தெரிந்தம். அற்புதமான ஜோடிப் பேருங்க. ரொம்ப நன்றி பாட்டி.

#####################################################################
Arindam = Destroyer of enemies .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (14-Oct-23, 5:52 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 63

மேலே